புதிய நட்பின் தொடக்கம்

புதிய நட்பின் தொடக்கம் அது பள்ளி பருவம். ஏழாம் வகுப்பு வரை மெட்ரிக் பள்ளியில் படித்த நாங்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக அரசு உதவிபெறும் மாநிலக் கல்விமுறையில் செயல்படும் பள்ளிக்கு மாற்றப்பட்டோம். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அதுவரை ஒரே பள்ளியில் பள்ளி வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நாங்கள் சைக்கிளில் பள்ளிக்குச் செல்லவேண்டும். ஆர்வமாக இருந்தாலும் கடினமாக இருந்தது. ஆனால் இங்கிருந்துதான் தொடங்கியது ஒரு புதிய அனுபவங்கள் கொண்ட வாழ்க்கை மற்றும் இந்த பள்ளியே எனது புதிய நட்பின் தொடக்கம்.Comments