துயரத்தின் உச்சம்


வாழ்க்கையில் துயரங்கள் இருப்பது சகஜமான காரியம். எனினும் வரும் துயரங்கள் நமது மனதில் உச்சக்கட்ட வேதனையைத் தரும்போது வாழ்க்கையே இன்னலாக மாறிவிடுகிறது. வாழ்க்கையைக் குறித்து நாம் காணும் கனவுகள் யவருக்கும் தெரிவதில்லை, அதை விளக்கினாலும் புரிந்துக்கொள்ள முயற்சிப்பதும் இல்லை. ஆனால் வாழ்க்கையின் தத்துவத்தை அதிகம் புரிந்து வாழ்பவர்கள் நாங்கள் மட்டுமே என்று தங்களை அனைவர் முன்னிலையில் பெருமைப்படுத்திக் கொள்வர் சிலர். அப்போது இதையும் கேட்க்கும் நிலை வந்ததே என என்னும் உணர்வே துயரத்தின் உச்சம், என் துயரத்தின் உச்சம்.

Comments